யாழ். ஏழாலை பகுதியில் பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை - கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது,110,000 மில்லிலீற்றர் கோடா, 40 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் என்பன சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

கத்தோலிக்க திருச்சபையின் கடைசித் தலைவராக போப் பிரான்சிஸ்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் தீர்க்கதரிசனம் News Lankasri
