நுவரெலியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நுவரெலியா (Nuwara Eliya) அம்பேவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா அம்பேவல 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
