ஒத்திவைக்கப்பட்டுள்ள இலங்கையின் கடன் கொடுப்பனவுகள்: ஜனாதிபதி விளக்கம்
இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்
எனினும், இந்த காலகட்டத்தில் வட்டி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர், 2042ஆம் ஆண்டு வரை கடன் செலுத்தல் காலத்தை நீடிக்கும் வகையில், செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வறுமை
கடன் சுமைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
எனினும், இறக்குமதியை நம்பியிருப்பது மேலும் கடன் வாங்க வேண்டிய நிலையை உருவாக்கலாம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வறுமை 2019இல் 15 சதவீதத்திலிருந்து தற்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |