இடியன் துவக்கு வெடித்து காயமடைந்த நிலையில் ஒருவர் கைது
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாகத் துப்பாக்கி வெடித்துக் காயமுற்ற நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தின் வனப்பகுதியில் பன்றிக்கு வெடி வைப்பதற்காகச் சட்டவிரோத இடியன் துப்பாக்கியைக் கொண்டு சென்று தயார்ப்படுத்திய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இருப்பினும் குறித்த நபர் இரகசியமாக மருந்து எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்த நிலையில் குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் அதற்குரிய குண்டு வகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, குறித்த நபரையும் கைது செய்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் குமுழமுனை 6 ம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 அகவையுடையவர் எனத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.



சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri