மட்டக்களப்பில் 3 வருடமாக தலைமறைவாகி இருந்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த நிலையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து மட்டு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் நாவலடி பகுதியைச் சோந்த 37 வயதுடைய குறித்த நபரையே14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுமுன்தினம்(20) உத்தரவிட்டடுள்ளார்.
எதிராக 26 வழக்குகள்
மட்டக்களப்பு முகத்துவாரம் நாவலடியைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த நபர் வெளிநாடு அனுப்புவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நிலையில் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நீதிமன்றங்களில் முன்னிலையாகாமல் 3 வருடங்களாக தலைமறைவாகி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக 9 திறந்த நீதிமன்ற பிடியாணையும் 4 பிடியாணையுமாக 13 பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து தொடர்பான பொறுப்பதிகாரியான பொலிஸ் சாஜன் கோகுலன் கிடைத்த தகவலுக்கு அமைய அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் திருகோணமலை சேருநுவர பகுதியில் தலைமறைவாகியிருந்த குறித்த நபரின் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு அவரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை அவருக்கு எதிராக 26 வழக்குகள் உள்ள நிலையில் ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளுக்கு அவருக்கு பிணைக்கு கையெழுத்திட்டவர்கள் தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri