நள்ளிரவு திடீரென அதிகரித்த எரிபொருள் விலை! முச்சக்கர வண்டி கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு, முச்சக்கர வண்டிகள் கட்டணங்களையும் உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் கிலோமீட்டர் கட்டணத்தை ரூ. 20 வினால் உயர்த்த வேண்டும் என முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எரிபொருள் விலை மீண்டும் திருத்தம்
தேசிய கூட்டு முச்சக்கர வண்டி மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா இன்று காலை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

"இன்று முதல் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எங்கள் சேவைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. எங்கள் சேவையை வழங்க எங்களிடம் போதுமான எரிபொருள் இல்லை, ஆனால் அரசாங்கம் விலையை உயர்த்தியுள்ளது.
மீட்டர்களை பயன்படுத்தும் சாரதி
இது மரத்திலிருந்து விழுந்த மனிதனை ஒரு காளை முட்டுவதைப் போன்றது. முதல் கிலோமீட்டருக்கு முச்சக்கர வண்டி கட்டணத்தை ரூ. 20 வினால் உயர்த்த நாங்கள் முன்மொழிகின்றோம்.
மீட்டர்களைப் பயன்படுத்தும் சாரதிகளால் மட்டுமே இதை சமாளிக்க முடியும். தற்போதைய நிலையை விளக்க நான் விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருவேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.