இருமடங்காக உயரும் விமானக் கட்டணங்கள்

SriLankan Airlines Sri Lankan Peoples Iran-Israel War Airport & Aviation Services
By Rukshy Mar 22, 2026 01:05 AM GMT
Report

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், விமான கட்டணங்கள் முந்தைய நிலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடித்துவக்கு கருத்து வெளியிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு கலன் ஜெட்  எரிபொருளின் விலை 2.25 டொலரிலிருந்து சுமார் 4 டொலராக உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அழிவுகரமான ஆயுதங்களுடன் களத்தில் குதிக்கும் ட்ரம்ப்

ஈரான் மீது அழிவுகரமான ஆயுதங்களுடன் களத்தில் குதிக்கும் ட்ரம்ப்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி

கடந்த திங்கட்கிழமை (16) நிலவரப்படி, இலங்கையிடம் 28 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு காணப்பட்டது. தற்போது சுமார் 21 நாட்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருமடங்காக உயரும் விமானக் கட்டணங்கள் | Plane Tickets Soar As Fuel Costs Double

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஒரு எரிபொருள் கப்பல் வரவுள்ளது. அத்துடன் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் மற்றுமொரு கப்பல் வரவுள்ளதால், விநியோகத் தடைகள் ஏற்படாது என பிரதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் விலை உயர்வு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பதில் தலைமை நிர்வாக அதிகாரி வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே பழைய விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதால், அந்தப் பயணிகளிடம் மேலதிக கட்டணத்தை வசூலிக்க முடியாது. இது நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இழப்புகளை ஈடுகட்ட உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பகுதிகளுக்கான விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுக்கான பயணிகளின் வருகை சீராக உள்ளது.

இருமடங்காக உயரும் விமானக் கட்டணங்கள் | Plane Tickets Soar As Fuel Costs Double

வருவாயைப் பெருக்குவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கான மேலதிக விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இலங்கையின் கடல்சார் துறை மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கப்பல்களின் வருகை அட்டவணையில் இதுவரை மாற்றங்கள் ஏற்படவில்லை என பிரதி அமைச்சர் கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார். 

நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரித்த எரிபொருள் விலை

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US