மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம் தொடர்பான அபிவிருத்தி! அமைச்சரவை அங்கீகாரம்
தற்போதுள்ள நீர் மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.
புதுப்பிக்கத் தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
இதற்கமைய, மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக ரந்தெணிகல, மொரகஹகந்த மற்றும் கலாவாவி ஆகிய 03 பிரதான நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்து மஹாவலி அதிகார சபை அடையாளம் கண்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
