கொரோனாவினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யஅனுமதி வழங்கப்படவில்லை!
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கொரோனாவினால் உயிரிழப்போரின் உடலங்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சு இன்னும் இந்த உறுதியான முடிவில் இருப்பதாக அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஆராய நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் முடிவு வந்ததும் அது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதுவரை கொரோன மரணத்தின் பின்னர் உடலங்களை விரைவில் தகனம் செய்யவேண்டும் என்பதே சுகாதார அமைச்சின் முடிவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam