அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள அனுமதி
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஜூலை 31 வரை வெளிநாடுகளுக்கு செல்ல நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு இன்று அனுமதி அளித்துள்ளது.
விவசாய அமைச்சரான தமது வாடிக்கையாளர், உலக உணவுத் திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் அலுத்கமகேயின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் பணிப்பாளர், அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் சதோச நிறுவன தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது 53.1 மில்லியன் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கும் நிரந்தர மேல்நீதிமன்ற அமர்வே இன்று அமைச்சருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.