யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயமானது நேற்று (02.06.2024) இடம்பெற்றுள்ளது.
பாராட்டுக்கள்
இதன்போது, நல்லை ஆதீனத்திற்குச் சென்ற ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றதுடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம் செய்து அங்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பில் இந்தியா – இலங்கைக்கு இடையேயான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சிறுவன் தன்வந்தைச் சந்தித்த ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam