உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள நிரந்தர நியமனம்
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களில் சுமார் 8,000 தொழிலாளர்கள் இருப்பதையும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா... சரத் வீரசேகர எழுப்பும் கேள்வி
அமைச்சரவை அங்கீகாரம்
மேலும், இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுமாறு விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விசாரணைகளை எந்தவித செல்வாக்குக்கும் இல்லாமல் மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri