இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்! பதிலளிக்க செல்லும் அரசாங்கத்தின் உயர் அமைச்சர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.
அரசாங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 49வது மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதியன்று ஆரம்பமாகிறது.
அது ஏப்ரல் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயம் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதியன்று கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தநிலையில் அமர்வின்போது இலங்கையின் நியாயங்களை அமைச்சர் பீரிஸ் விளக்கவுள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதுவரை காலத்தில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களை அனுப்புவதில் அசிரத்தை போக்கையே காட்டி வந்தது.
எனினும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையை அடுத்தே வெளியுறவு அமைச்சர் இந்த அமர்வில் பங்கேற்கிறார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam