யாழில் மக்கள் வீதியில் நெல் விதைத்து விநோத போராட்டம்
வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் - காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மக்கள் விநோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது மூளாய் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும் மற்றும் உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விநோத போராட்டம்

இப் போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றியிருந்தனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்தப் பாரபட்சம், R.D.A அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா? வழக்கம்பரை தொடக்கம் பொன்னாலை வரை வாழும் மக்கள் மந்தைகளா? வெள்ளத்தில் நீந்தியா நாம் பள்ளிக்கு வருவது போன்ற பல பதாகைகளைத் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam