விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை

Vavuniya Sri Lankan Peoples Thurairajah Raviharan
By Shan Oct 13, 2026 05:16 AM GMT
Report

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட, தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் முறையீட்டிற்கு அமைவாக, நேற்றுமுன் தினம் (11.10.2026) விண்ணாங்கம்பிட்டி கிராமத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அப்பகுதியின் நிலைமைகளை ஆராய்ந்ததுடன், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

முறைப்பாடு

இதன்போது, தமது பூர்வீக வாழ்விடமான விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறுவதற்கு வனவளத் திணைக்களம் தடையாக இருப்பதாகவும், தமது பூர்வீகக் காணிகளில் குடியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் அவரிடம் முறையிட்டனர்.

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை | People Submit Requests To Mp Ravikaran

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத் திணைக்களம் மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளை அபகரித்து வைத்துக்கொண்டு, அவர்களை அங்கு மீள்குடியேறவிடாமல் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.

அத்துடன், விண்ணாங்கம்பிட்டி கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதுடன், நாடாளுமன்றத்திலும் இவ்விடயத்தை வலியுறுத்தி, தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.

1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள், 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 1984ஆம் ஆண்டு அயற்கிராமமான ஒதியமலையில் 32 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பட்டிக்குடியிருப்பில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விண்ணாங்கம்பிட்டியில் வாழ்ந்த தமிழ் குடும்பங்களும் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை | People Submit Requests To Mp Ravikaran

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும், விண்ணாங்கம்பிட்டி கிராமம் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை 

மீள்குடியேறிய மக்களும் வெளியேற்றப்பட்டனர் விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமது பூர்வீகக் காணிகளில் சில குடும்பங்கள் மீளக்குடியேறி வசித்தபோது, வனவளத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் முறையிட்டனர்.

தமது பூர்வீக வாழ்விடத்தில் மீள்குடியேறுவதற்காக கிராம அலுவலர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரவிகரன் எம்.பியிடம் மக்கள் கோரிக்கை | People Submit Requests To Mp Ravikaran

உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழும் மக்கள் விண்ணாங்கம்பிட்டி கிராமம் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத காரணத்தால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது அயற்கிராமங்களில் உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்து வாழ்வதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், மக்களின் கோரிக்கைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவர்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதுடன், நாடாளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

திட்டமிட்டு ஷிரந்தியை சிறையில் அடைத்த அநுர - இரண்டு வருடங்களுக்கு முன்னர் சபதம்

திட்டமிட்டு ஷிரந்தியை சிறையில் அடைத்த அநுர - இரண்டு வருடங்களுக்கு முன்னர் சபதம்

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US