முடிந்தால் கோட்டாபயவை என் வீட்டுக்கு வர சொல்லுங்கள்! மரணிக்கவும் பயமில்லை - மக்கள் ஆவேசம் (Video)
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்தால் கொம்பனி தெருவில் உள்ள என் வீட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபயவை வர சொல்லுங்கள் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கொழும்பில் மக்கள் பலர் தமது கருத்துக்களை எமது செய்தி சேவையுடன் பகிர்ந்திருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்சவை இங்கு வர சொல்லுங்கள். அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். பேசுவதற்கு வர சொல்லுங்கள்.
தற்போது அனைவரும் பட்டினியில் இருக்கின்றோம். சிறுவர்கள் வந்து வரிசையில் நிற்கின்றனர்.
இதனை பார்க்க மாட்டார்களா? ஜனாதிபதி உள்ளே இருக்கின்றார், எதுவும் புரிகின்றதா என்று தெரியவில்லை.
அனைவரும் வரிசையில் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி குடித்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குள் இருக்கின்றார் என மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
