அவிசாவளை, பென்றிக் தோட்ட மக்கள் போராட்டம்
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியைப் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்குச் செல்லும் வழியை மறித்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பென்றிக் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை, தோட்ட அதிகாரி பலவந்தமாக உடைத்துள்ள நிலையில் இதனைத் தடுக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணையும் தாக்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வயோதிபப் பெண்ணின் மகன்மார், தோட்ட அதிகாரியைத் தாக்கியுள்ளனர். வயோதிபப் பெண்ணும், தோட்ட அதிகாரியும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வேண்டும் எனவும், குறித்த தோட்ட
அதிகாரியை பணிநீக்குமாறு வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
