மன்னாரில் இடம்பெற்ற தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு
தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு இன்றைய தினம் மன்னார் கீரி ஞானோதயா மண்டபத்தில் சட்டத்தரணி T.வினோதன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மன்னார் பள்ளிமுனை பகுதியில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணி தொடர்பான பிரச்சினை மற்றும் கனிய மணல் அகழ்வு காரணமாக ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கழிவு மீன்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மற்றும் போர் குற்ற உள்ளக பொறிமுறை விசாரணை தொடர்பாகவும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்த மரண சான்றிதழ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மக்களால் எழுப்பப்பட்ட பல்வேறு மனித உரிமை சார்ந்த கேள்விகளுக்கு சட்ட ஆலோசனைகள், பதில்களும் வழங்கப்பட்டது.
குறித்த செயலமர்வில் சட்டத்தரணி சுகாஷ்,சட்டத்தரணி டினேசன்,சட்டத்தரணி அன்ரனி றொமேல்சன், சட்டத்தரணி ரூபன்ராஜ் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ,மனித உரிமை மீறல் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri