இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து நீதி கோரி மனு கையளிப்பு
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
ஐ.நா அதிகாரி
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீனதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் குறித்த மனு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறையின் அவசியத்தை, இலங்கையின் தமிழ் கட்சிகள், நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு எடுத்துரைத்துள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் போன்றவற்றின்; பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நான்கு தசாப்த காலப் போரின் போது நடந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்தக் கடிதம் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்ஸ்தானிகரின் வருகையை இலங்கை அரசாங்கம், தமது சட்டபூர்வமான நிலைப்பாட்டை அதிகரித்துக்கொள்ளவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் செயற்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் என்றும் தமிழ் கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இந்தக் கடிதம் நேற்று இரவு வடக்கில் வைத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri