திருகோணமலையில் அதிக சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
கடந்த மே மாதம் 06ம் திகதி நடந்து முடிந்த, உள்ளூராட்சி மன்றத்துக்கான தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில், அதிக சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இந்த மாவட்டத்தில், ஒரு மாநகர சபை மற்றும் ஒரு நகர சபை உட்பட, மொத்தமாக 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு, தலைவர் மற்றும் பிரதித் தலைவர் தெரிவு செய்ய, கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும், நேற்றைய(24) தினத்துடன் நிறைவடைந்தன.
இலங்கை தமிழரசுக் கட்சி
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில், ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர, மொரவெவ, வெருகல் ஆகிய 4 சபைகளில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி தனித்து பெரும்பான்மை பெற்றுக் கொண்ட கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர, மொரவெவ, ஆகிய சபைகளில் தனித்தும், சேருவில மற்றும் கந்தளாய் ஆகிய இரு சபைகளில், ஏனைய கட்சிகளின் ஆதரவோடும், மொத்தமாக 5 சபைகளின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுக்கொண்ட, வெருகல் பிரதேச சபையில் தனித்தும் , திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஏனைய கட்சிகளின் ஆதரவோடும் மொத்தமாக 4 சபைகளின், ஆட்சி அதிகாரத்தை, கைப்பற்றியுள்ளது.
கிண்ணியா நகர சபை மற்றும் தம்பலாகமம் பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
குச்சவெளி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், கிண்ணியா பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஏனைய கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
