சுவிஸ் தூதுக்குழுவினருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல்!
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை நேற்று முன்தினம்(17)ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு குறி்ப்பிட்டார்.
டித்வா பேரிடரால் வடக்கில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆளுநர் விளக்கித் கூறினார்.
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
இராணுவ முகாம்கள் அகற்றம்
"பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புக்களைச் சீர்செய்வதற்கு நாம் கோரிய நிதியை விடுவிப்பதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளமை மற்றும் கடந்த காலங்களில் காணப்பட்ட வீதியோரப் பாதுகாப்பு முகாம்கள் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் துணைத் தூதுவர் தனது சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், "உயர்பாதுகாப்பு வலயத்தினுள் நீண்டகாலமாக இருந்த வீதிகள் மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டு வருவதுடன், காணிகளும் பகுதி பகுதியாக விடுவிக்கப்படுகின்றன.
கிவுல் ஓயாத் திட்டம்
எனினும், மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், மாகாண சபையின் அதிகார வரம்புகள், செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan