நாடாளுமன்ற உறுப்பினரின் எரிக்கப்பட்ட வீட்டை புனரமைக்க முன்வந்துள்ள மக்கள்
பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவின் எரிக்கப்பட்ட வீட்டை திருத்திக்கொடுக்க பொதுமக்கள் முன்வந்துள்ளனர்.
கடந்த 09ம் திகதி காலி முகத்திடலில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் தீ வைத்து எரித்து நாசமாக்கிய வீடுகளில் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்திருந்த பிரசன்ன ரணவீரவின் வீடும் எரிந்து நாசமாகியிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் கம்பஹா மாவட்ட பொதுமக்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து அவரது வீட்டைத் திருத்திக் கொடுக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்கள் நிதியுதவி
இந்த நடவடிக்கைக்கான நிதியுதவி மற்றும் பொருள் அன்பளிப்புச் செய்ய பலரும் முன்வந்திருந்த நிலையில், இன்று காலை திருத்தப் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.
கம்பஹா மாவட்ட பொதுமக்களுடன் நல்லுறவை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், வன்முறையை எதிர்க்கும் நிலைப்பாட்டை வெளிகாட்டும் வகையிலும் பிரசன்ன ரணவீர எம்.பி.யின் வீட்டை தன்னார்வ அடிப்படையில் திருத்திக்கொடுக்க முன்வந்ததாக அங்கு வந்திருந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri