கோறளைப்பற்று மத்தி கூட்டுறவுச் சங்க நிரப்பு நிலையத்தில் முறைகேடு - மக்கள் போராட்டம்(Photo)
கோறளைப்பற்று மத்தி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு இடம்பெறுவதாக கூறி பொதுமக்கள் வீதியை மறித்து இன்று (24) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கி வரும் நிலையில் நேற்று (23) கோறளைப்பற்று மத்தி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 0, 1, 2 என்ற இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்திற்கான காரணம்
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டு வந்த வேளையில் இன்று (24) அதிகாலை 3 மணியுடன் பெட்ரோல் முடிவடைந்துள்ளதாக கூறி கோறளைப்பற்று மத்தி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தினர் நிரப்பு நிலையத்தினை மூடி சென்றுள்ளனர்.
இதனால் அங்கு வரிசையில் காத்திருந்த பலருக்கு பெட்ரோல் கிடைக்காத நிலையிலும், கையிருப்பில் பெட்ரோல் 600 லீட்டருக்கு மேல் உள்ளதாக பொதுமக்கள் வீதியினை மறித்து எரிப்பொருள் நிலையம் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது தங்களுக்கு வேண்டிய விசுவாசிகளுக்கு மாத்திரம் பெட்ரோல் அதிகமாக வழங்கியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோர்க்கைகள்
வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நிரப்பு நிலையத்தில் முறைகேடு இடம்பெறுவதாக தெரிவிக்கும் பட்சத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கோரியதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு எரிபொருள் வழங்கி வரும் நிலையில் கோறளைப்பற்று மத்தி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் அனுமதி அட்டை வழங்கும் நடைமுறையை மேற்கொண்டால் மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது என பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
