எரிபொருள் விநியோகத்தில் பிரதேச செயலாளருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு(Photos)
கிளிநொச்சியில் பொலிஸாரின் பாதுகாப்பின்றி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் அமைதியாக எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனுடன் நேற்று(23) பொலிஸார் மேற்கொண்ட முரண்பாட்டை அடுத்து இன்றைய(24) தினம் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது
பொலிஸ் அதிகாரியுடன் முரண்பாடு
பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கும் அதே நேரம் பொலிஸாருக்கும் வழங்குமாறு பொலிஸார் கோரிய நிலையில் அதற்கு பிரதேச செயலாளர் மறுத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி ஒருவருடன் முரண்பாட்டையடுத்து இனி பாதுகாப்பு கடமைக்கு வரமாட்டோம் என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விநியோகம்
இதேவேளை கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடர் இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு கடமைக்கு பொலிஸார் வருகை தந்திருக்கவில்லை.
இந்த நிலையில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில், கிராம சேவையாளர்கள் மற்றும், உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் அமைதியான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம்:எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் |