யாழ்.மீசாலை பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம்(Jaffna) சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(26.06.2024) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள வீதி
ஐந்து வருடங்களாக புனரமைக்கப்படாத இந்த வீதியால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற போதிலும் மிக மோசமான நிலையில் வீதி பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
3 மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபற்ற ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐவர் ஆளுநரின் செயலாளரை சந்தித்து ஆளுநரின் ஊடாக ஜனாதிபதிக்கான கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வீதியினை பயன்படுத்தும் 5 கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
