கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய நபர்
கட்டுநாயக்க (Katunayake) விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 இலங்கையர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று (26.06.2024) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் (Dubai) இருந்து சென்னைக்கு (Chennai) வந்து அங்கிருந்து நேற்று (25) பிற்பகல் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மலக்குடலில் மறைத்து வைப்பு
கைதானவர்கள், கல்முனை, மூதூர், கொழும்பு -10, கல்கெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் எனவும், இவர்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஸ்கேன் சோதனைக்கு அனுப்பியதை அடுத்து, அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்தமையும், மேலும் இருவர் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல் உருண்டைகளை பயணப் பொதிகளில் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் இந்திக்க சில்வா உள்ளிட்ட சுங்க அதிகாரிகள் குழுவினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri