விவசாய பணிப்பாளரின் இடமாற்றம்: எதிர்ப்பில் ஈடுபட்ட மட்டக்களப்பு விவசாயிகள்(Video)
மட்டக்களப்பு மாவட்ட பிரதான விவசாய பணிப்பாளரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்பாட்டமானது மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று(27.12.2023) நடைபெற்றுள்ளது.
மேலும் தற்போதுள்ள விவசாய பணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், புதிய பணிப்பாளருக்கு வழங்கப்படவுள்ள நியமனத்தை நிறுத்த வேண்டும் எனவும் ஆர்பாட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நியமிக்கப்படவுள்ள புதிய விவசாய பணிப்பாளர் இதற்கு முன்னர் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மீண்டும் அவரை நியமிப்பது பொருத்தமற்ற விடயம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
