ஒட்டுசுட்டானில் அமைக்கப்படவுள்ள பாரிய கிணற்றை எதிர்க்கும் மக்கள்
ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகால் சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்பட உள்ளது.
இதனால், நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.
மக்கள் எதிர்ப்பு
ஒட்டுசுட்டான், சிவநகர், காதலியார் சமணங்குளம், போன்ற கிராமங்களில் வசிக்கும்
குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த மக்கள் நிலக்கடலை, மிளகாய், பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை பண்ணிவருகின்றார்கள்.
எனவே, நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கும் நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
மேலதிக தகவல் - தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |