முல்லைத்தீவில் இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாமிற்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, இராணுவ தளபதி, வருகை தரவுள்ள நிலையிலேயே இந்நப் போராட்டம் இன்று (27.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் மனு ஒன்றினை கையளித்திருந்தனர்.
இராணுவத் தளபதி வருகை
எனினும், தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
கேப்பாப்பிலவில் ஒருபகுதி மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.
அதேவேளை, சற்றுமுன்னர் இராணுவ தளபதி கேப்பாபிலவு இராணுவ பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு உலங்குவானூர்தி மூலம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |