மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு

Mannar Selvam Adaikalanathan Northern Province of Sri Lanka
By Ashik Jun 15, 2024 08:56 AM GMT
Report

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் பலவந்தமாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம்பெற இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது இன்று (15.06.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு அபராதம்

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு அபராதம்

வாழ்வாதாரம்

இந்தப் பகுதியில் சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.

அடைக்கப்பட்ட காணிகள் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கனிய மணல் அகழ்வு

எனினும், குறித்த காணிக்குள் இன்று (15) காலை வருகை தந்த சிலர் காணியில் கனிய மணல் அகழ்வில் ஈடுபட நடவடிக்கை எடுத்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்தனர். 

மேலும் காணியில் என்ன திட்டம் முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற விடயம் தமக்கு தெரியாது என்றும் வெளிப்படையாக எமக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அத்துமீறி பிடிக்கப்பட்ட காணி பகுதிக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்தவருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றமையினால் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் மக்களுடன் பிறிதொரு தினத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த காணியில் நின்ற உரிய நபர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறினார்.

யாழில் நவீன பொது மலசலகூட தொகுதி நிர்மாணிப்பு: துறைசார் தரப்பினருக்கு டக்ளஸ் பணிப்பு

யாழில் நவீன பொது மலசலகூட தொகுதி நிர்மாணிப்பு: துறைசார் தரப்பினருக்கு டக்ளஸ் பணிப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US