பங்களாதேஷின் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பங்களாதேஷின் பாரிய மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள பங்களாதேஸ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலை கழக மாணவர் ஒன்றியம், சிவில் செயற்பாட்டாளர்கள், காலிமுகத்திடல் போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri