எரிபொருள் விலை உயர்வு சாதாரண விலைத் திருத்தமல்ல! பாதிக்கப்படும் மக்கள்
நாட்டில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது ஒரு சாதாரண விலைத்திருத்தமல்ல என்பதைக் காட்டுகிறது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(6.5.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை உயர்வின் முதல் தாக்கம் போக்குவரத்தில் தெரியும். டீசல் விலை உயர்ந்தவுடன் தனியார் பேருந்து கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
எரிபொருள் விலை உயர்வு
இது வெறும் பயணச் செலவை மட்டுமல்ல தினசரி தொழிலுக்குச் செல்வோர், மாணவர்கள், சிறுவியாபாரிகள், ஆகியோரின் வாழ்க்கைச் செலவை நேரடியாக அதிகரிக்கும். இதனால் நகர்ப்புற வாழ்க்கை மட்டுமல்லாமல் கிராமப்புறங்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை உட்பட பல கிராமப்புறங்களில் உள்ள பொது மக்கள் எரிபொருள் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்துறையிலும் தாக்கம் கடுமையாக காணப்படுகின்றது. குறிப்பாக நீர்ப்பாசன வசதிகள், உரம் மற்றும் பொருட்கள் போக்குவரத்து ஆகிய அனைத்தும் எரிபொருளையே சார்ந்தவை.
சமூக நெருக்கடி
மீன்பிடித் துறையும் இந்த நெருக்கடியிலிருந்து விடுபடாது கடலுக்குச் செல்லும் செலவு அதிகரித்தால் கடற்றொழிலாளர்கள் தொழிலை குறைப்பார்கள்.

இதனால் சந்தையில் மீன் வரத்து குறைந்து தற்போது விலை உயரும் நிலை காணப்படுகின்றது. எரிபொருள் விலையுயர்வு ஒரு பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல அது சமூக நெருக்கடியின் ஆரம்பமாக மாறக் கூடியது.
எனவே இந்த நெருக்கடிகளைத் தொடர விடாமல் நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam