இலட்சக்கணக்கில் எகிறும் வாகனங்களின் விலை - இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி
இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 1.25 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வரி திருத்தம், தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு இடையிலான வரிவிதிப்பு நடைமுறைகளை சீரமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன விலை அதிகரிப்பு
முன்னர் தனிநபர் இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வரி, தற்போது அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சுங்க அனுமதி புள்ளியிலேயே அறவிடப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக வாகனங்களின் விலை 130,000 ரூபாய் முதல் 215,000 ரூபாய் வரையிலும், நடுத்தர ரக வாகனங்களின் விலை 345,000 ரூபாய் முதல் 510,000 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) போன்ற உயர் ரக வாகனங்களின் விலை 980,000 ரூபாய் முதல் 1.45 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam