நாட்டை இராணுவமயமாக்க கோட்டாபயவிற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க
நாட்டை இராணுவ மயமாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு(Gotapaya Rajapaksa) மக்கள் ஆணை வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியிலான ஆட்சியை முன்னெடுக்கவே கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் ஆணை வழங்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜனநாயக வரைமுறைகளைப் பின்பற்றியே செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் ஓய்வு பெற்ற படை அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை இன்று தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் செயற்பாடுகளின் மூலமே இது வெளிப்பட்டுவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு படையதிகாரிகளை முக்கிய பதவிகளில் அமர்த்துவதனால் மக்களுக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை எனவும், இராணுவ மயமாக்கல் என்பது மிகவும் ஆபத்தான ஓர் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri