யாழில் போராட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் அகற்றப்படாமையால் மக்கள் சிரமம்
யாழ். நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
வீதித்தடைகள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் யாழ் விஜயம்
தைப்பொங்கல் தினத்தன்று தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை தடுப்பதற்கான முன்னேற்பாடாக அதிகளவான வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
