ஆசிய கோப்பை 2025:பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் 6ஆவது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது.
இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான்அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பாகிஸ்தான் அணி
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தது.
பர்ஹான் 40 ஓட்டங்களும், ஷாஹின் அப்ரிடி 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம் - மணிவண்ணன் குற்றச்சாட்டு
இந்திய அணி
இதையடுத்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
அவர் 13 பந்தில் 31 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 31 ஓட்டங்களில் வெளியேறினார்.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.




