வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள்

Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Feb 17, 2026 01:39 PM GMT
Report

சித்தரை புத்தாண்டு தினத்தன்று பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர். 

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.

சட்டத்தரணி தம்பதி படுகொலை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா..! சஜித் சாடல்

சட்டத்தரணி தம்பதி படுகொலை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா..! சஜித் சாடல்

பாதை அமைக்கும் பணி

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள் | People In The North Demand Release Of Palali Road

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில் , குறித்த பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர் பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் , வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மன்னார் இளைஞன்.. பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மன்னார் இளைஞன்.. பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதிரடியாக கைது

கோரிக்கை

ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும் , பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும் , பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள் | People In The North Demand Release Of Palali Road

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில் , அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி , தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது , நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும் , அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் , ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து , ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரியுள்ளனர். 

சற்று முன்னர் சிறப்பு விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி அநுர

சற்று முன்னர் சிறப்பு விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி அநுர

GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US