பயண கட்டுப்பாடுகள் காரணமாக மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கோவிட் பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மாவட்ட ரீதியில் பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளது.
அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களைத் தவிர்த்துள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர்ப் பகுதிக்கு வருவதைத் தவிர்த்துள்ளனர்.
அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து
கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கும் எனவும் முப்படையினர் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
