தப்ப முடியாத ஆபத்தில் பிள்ளையான்..! சகீத்திடம் கிடுக்குப்பிடி விசாரணை
மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு நேற்றைய தினம்(15) பிள்ளையான் வருவார் என பலர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
மாறாக அவர் பற்றிய பல உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
முதலமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு கொலைச் செய்து, அதனை மறைத்தமை, ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட பிள்ளையான் இணையுவழி மூலம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சுரேஷ் சலே தொடர்பிலான விசாரணைகளில் சற்று தாமதம் இருந்தாலும், பிள்ளையான் மற்றும் அவருடன் இருந்த சகாக்கள் தொடர்பிலான விசாரணைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கமைய, டுபாயில் பதுங்கியிருந்த பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்று ஏகப்பட்ட வெளிவராத உண்மைகளை கொண்டு வருகின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,