மக்களை சுமைக்குள் தள்ளும் நடவடிக்கையில் அரசு - இரா.துரைரெட்னம்
கோவிட் பாதிப்பினால் மக்கள் வறுமையில் வாடும் நிலையில் ஒரு நிவாரண திட்டத்தினை அறிவிப்பதற்குப் பதிலாக பெற்றோல் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளதானது மக்களைச் சுமைக்குள் தள்ளும் நடவடிக்கையெனக் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய நிலையில் பெற்றோல் விலையேற்றத்தினால் பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கக்கூடிய நிலையுள்ளதனால் பெற்றோல் விலை அதிகரிப்பு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ்வா சாவா எனப் போராடிவரும் நிலையில் பொருளாதார ரீதியான சுமையினையும் சுமத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri