தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை : மன்னார் வேட்பாளர் தெரிவிப்பு
தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை, கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (13) இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் தெளிவூட்டல்கள்
மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் இரண்டு வேட்பாளர்கள் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது தனது குறிக்கோளாக உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அவரது கருத்து எமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.
எங்களை வெற்றி பெற வைக்க தமது முயற்சிகளையும் மக்கள் மத்தியில் தெளிவூட்டல்களையும் முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகள்
தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளையே மக்கள் வெறுத்து வருகின்றனர் என்பதை நான் வருகை தந்தவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கும் போது குறித்த குற்றச்சாட்டுக்களை மக்கள் என்னிடம் முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நாங்கள் செயல்பட வேண்டும்”.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
