ஆட்சியாளர்களின் புண்ணியத்தில் மக்களுக்கு மூன்று வேளை சாப்பிட முடியவில்லை-சரத் பொன்சேகா
ஊழல் ஆட்சியாளர்களின் செய்த புண்ணியத்தால், நாட்டு மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாமல் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் முகத்தில் சிரிப்பை காண முடியவில்லை
இது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் காலம். அப்படியான நேரத்தில் நீங்கள் எங்களுடன் கைகோர்த்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்து வரும் காலம்.
நாங்கள் இந்த காலத்தில் மக்களின் முகத்தில் சிரிப்பை காணவில்லை. நாட்டின் தற்போதைய ஊழல் ஆட்சியாளர்களின் புண்ணியத்தில் நாட்டில் வாழும் 80 வீதமான மக்களுக்கு மூன்று வேளை சாப்பிட முடியாமல் போயுள்ளது.
மக்களால் இறைச்சி,மீன் சாப்பிட முடியவில்லை
பிள்ளைகளுக்கு ஒரு வேளை சாப்பாட்டை சரியாக கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் தற்போது மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் காய்கறியுடன் சோறு சாப்பிடுகின்றனர். இறைச்சி, மீன் சாப்பிட முடியாத நிலைமை.
பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடைகளை வாங்கிக்கொடுக்க முடியாத சூழல், முதியவர்களுக்கு மருந்துகளை பெற முடியவில்லை. அரசாங்கம் மருந்துகளை கொடுப்பதில்லை. மருந்துகளை கொள்வனவு செய்ய கையில் பணமில்லை எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
