அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் பசில்
ஶ்ரீல்ஙகா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக பசில் ராஜபக்ச அமெரிக்காவில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் ஈடுபடுவாரா..
எதிர்வரும் வியாழக்கிழமை பசில் நாடு திரும்புவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்ச ஒர் அமெரிக்கப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. பசில் ராஜபக்ச நாடு திரும்பியதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா இல்லையா என்பது பற்றி அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பொதுஜன முன்னணி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போதிலும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சி குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
