இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குறித்து வெளியான தகவல்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் குவிந்து கிடக்கும் 3,000க்கும் மேற்பட்ட இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை, சில மாதங்களாக பரிசீலித்து வருகிறது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சில விண்ணப்பங்களும் கவனிக்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விண்ணப்பங்களில் குறைந்தது 1,000 விண்ணப்பங்கள் பொலிஸ் மற்றும் மாநில புலனாய்வு சேவையின் அனுமதி உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முழுமையாக தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கை
ஆனால் பல முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு நிதியளித்ததாகவும், அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறப்படும் தகவல்களால், விண்ணப்பங்கள், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
குற்றவியல் குழுவினர், அரசியல் ஆதரவை இழந்துள்ள நிலையில், அவர்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளை நியமிப்பதன் மூலம், தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர முயற்சிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உரிய விசாரணைகள்
இது ஒரு ஆபத்தான எதிர்காலத்தின் அறிகுறியாகும் என்று அவர் விபரித்துள்ளார்.
பாதுகாப்பு துறையினருடனான சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி, பொது பாதுகாப்புதுறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
