மட்டக்களப்பில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்களை மடக்கி பிடித்த மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய நடவடிக்கைகள்
மேலும், அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில் முக்கிய பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன.









