உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுறுத்தும் நோக்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
உக்ரைன் ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போது, இந்த இரு நாள் சந்திப்பு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
உக்ரைன் பிரதிநிதிகள் குழுவில் ஜனாதிபதியின் அலுவலகத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், கிரிலோ புடானோவ் மற்றும் செர்ஹீ கிஸ்லிட்சியா, அவரது சர்வன்ட் ஆஃப் த பீப்புள் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகாமியா, மேலும் பொது படைத்தளபதி (Chief of the General Staff) ஆண்ட்ரி ஹ்நாட்டோவ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நேரத்தில், அனைத்து தரப்புகளும் முழுமையாக முயற்சி எடுத்தால் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் யாராவது அரசியல் விளையாட்டில் ஈடுபட்டால் போர் தொடரும் என செலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam