சட்டவிரோதமாக இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 7 பேர் கைது (PHOTOS)
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுப்பு
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், சிறுவன், சிறுமி உள்ளடங்களாக 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பதற்றம் |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
