புதுக்குடியிருப்பில் நான்கு உடும்புகளுடன் மூவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை உடும்புகளுடன் நேற்று(25.02.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டாரப்பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்யமுற்பட்ட மூவரையே பொலிஸார் இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்களையும்
சான்று பொருட்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam