கிளிநொச்சியில் வெளி நோயாளிகளுக்கு அரச வைத்தியசாலையில் முன்னுரிமை
கிளிநொச்சியில் தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களை அரச வைத்தியசாலையில் விசேடமாக அழைத்து சிகிச்சையளிக்கப்படுவதால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு விசேடமாக பார்வையிடும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவில் இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகள்
விசேட வைத்திய நிபுணரிடம் காண்பிப்பதற்காக தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்கள் இவ்வாறு வரிசை நடைமுறையை பின்பற்றாது அழைக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற ஏழைகள், போக்குவரத்து உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
வெளிநோயாளர் பிரிவில் நீண்ட வரிசையில் நின்ற பின், கண் சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்படுகின்றனர். மீண்டும் அங்கு தொடர் இலக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், குறித்த வரிசை நடைமுறையை பின்பற்றாது, தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றனர்.
அவர்களிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வைத்தியர்கள் பார்வையிடுகின்றனர். சிகிச்சைக்காக சென்ற ஏழை நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், தூர இடங்களிலிருந்து செல்லும் ஏழை நோயாளர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றனர்.
இலவச மருத்துவ சேவை
இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் மருத்துவ துறையில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு அரச செலவில் இலாபமீட்டும் வைத்தியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இலவச சிகிச்சைக்காக செல்லும் மக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். உரிய வரிசை நடைமுறைகள் பின்பற்றப்படுவதை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பதுடன், விசேட வைத்திய நிபுனர்களை சந்திக்க தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினால் சிபாரிசு செய்யப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதனால், பின் தங்கிய பிரதேசங்களிலிருந்து சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் இலவச மருத்துவ சேவையை முழுமையாகவும், உரிய முறையிலும், தாமதமின்றியும் பெற்றுக் கொள்ளும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
