இலங்கையில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
உலக எண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள் மரணிக்கலாம்.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
நோயெதிர்ப்பு மருந்துகள்
இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும்.
அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன. எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம்.
ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை.
இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர்களிடையே பரவும் நோய்கள்
கை - கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் சிறுவர்களிடையே காணப்படுகின்றன. இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய நாட்களில் சுவாசக்குழாய் நோய்களான இருமல், சளி, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் ஹெபடைடிஸ், வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் போன்றவை குழந்தைகளிடையே பரவி வருகின்றன.
இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள். வாயைச் சுற்றி சிவப்பு புள்ளிகள் மற்றும் கைகளில் சிவப்பு புள்ளிகள் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் ஏற்பட்டிருக்கலாம்.
டெங்கு பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுங்கள் என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |